நான் பார்த்ததிலே – கா.கௌசிகா

 


நான் பார்த்ததிலேபயண அனுபவக் கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  • முன்னுரை
  • குமரி அமைப்பு
  • கடல் அமைப்பு
  • சூரியோதயம்
  • திருவள்ளுவர் சிலை
  • விவேகான்ந்தர் பாறை
  • முடிவுரை

 

முன்னுரை:

                        இந்தியாவின் தெங்கோடியில் அமைந்துள்ள குமரிக்கண்டம் என அழைக்கப்படிகிற இடமே கன்னியாகுமரி ஆகும். கன்னியாகுமரி மாவட்ட்த்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழைமையானது. சென்னையிம் இருந்து சுமார் 700 கி.மீ ரயில் பயணம் மூலம்  வந்தடைந்தேன். மேலும் பல சிறப்புகள் வாய்ந்த கன்னியாகுமரியை எனது பயண அனுபவம் வாயிலாக காண்போம்.

குமரி அமைப்பு:

            இது தமிழ்நாட்டின் 38 மாவட்டகளில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,671 .கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது. பத்மநாபுரம், குளச்சல், குழித்துறை என 3 நகராட்சிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும்  மலையாள மொழிகள் பேசப் படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழக்த்தில் இரண்டாம் இடம் (.கி.மீ க்கு1111 – நபர்) வகிக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழன் ஐந்தினைகளில் நாங்கு தினைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டமாகும்.

 


கடல் அமைப்பு:

                        இயற்கை பேரழில் கொஞ்சும் கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரேயிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக இந்த கடற்கரை விளங்குகின்றது இந்த கடற்கரையில் உள்ள மண் பல நிறங்களை கொண்டதாக காணப்படுகிறது.

 

சூரியோதயம்:

                        கன்னியாகுமரியில் காலை சூரிய உதயமும், மாலை சூரியன் மறையும் காட்சியும் காண்பது மிகவும் சிறப்பானது. இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் சூரிய உதயமும், சூரிய மறைவும் காணப்படுகிறது. இது நம் கண்களுக்கு கிடைக்கும் வண்ணத் திருவிழா வானம் வாரியிறைக்கும் வர்ணஜாலம் அது.

 

திருவள்ளுவர் சிலை:

                                    திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி கடலில் கடல் நடுவே நீர்மட்ட்த்திலிருந்து 30 அடி உயரம் உள்ள பாறை மீது 133 அடி உயர திருவள்ளுவர் உருவச் சிலை ஜனவரி-1-2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

 


விவேகானந்தர் பாறை:

                                    கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த இங்கு செல்வது ஓர் த்ரில் அனுபவம் ஆகும். விவேகானந்தர், ராமகிருஷ்ணத் தொடர்பான பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும் .

 

முடிவுரை:

            கன்னியாகுமரியில் மேலும்  பல சிறப்பு வாய்ந்த இடங்களான காந்தி மண்டபம், சுசீந்திரம் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற இடங்களை பார்த்து கண்டுகளித்தேன். அவை எனது மனதிற்கு மகிழ்ச்சியாகவும், பல இடங்கள் என்னை பெருமைப் படவும் வைத்தது. இந்த பயணம் எனது மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

 

-கா-கௌசிகா

 

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post