வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனை பற்றிய கட்டுரை
என் பெயர் கமலேஷ் நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் என் அம்மா எங்கள் வீட்டின் கேட் அருகில் கரும்பலகையில் தினமும் அன்றைய நிகழ்வுகள் தலைவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் பண்டிகை நாள் என கரும்பலகையில் எழுதி வைப்பார்கள் இதைப் பார்த்த நான் அம்மாவிடம் நானும் எழுதுகிறேன் என்று கேட்டேன் அம்மா நீயும் அக்காவும் எழுதுங்கள் என்று கூறி நீ நான் திருக்குறளுக்கு பொருள் எழுதித்தருகிறேன் தினமும் ஒரு திருக்குறள் சொல் என்று சொன்னார் நானும் தினமும் ஒரு திருக்குறள் சொல்லி அதற்கான பொருளை கூறி கைபேசியில் வாட்ஸ்அப் மூலமாக அனைவருக்கும் அனுப்பி வைத்தோம் இதை இரண்டு வருடங்களாக செய்தோம் இதைப் பார்த்த இந்து தமிழ் திசை நிருபர் எங்களை பேட்டி எடுத்து இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாக வெளியிட்ட பின்பு சன் டிவி நியூஸ் 18 தொலைக்காட்சி என தொலைக்காட்சியில் பேட்டி எடுத்து எங்களைப்பற்றி ஒளிபரப்பினர் மாலை மலர் பொங்கல் மலர் சிறப்பு மலரில் எங்களைப் பற்றிய கட்டுரை வெளியானது அன்றுமுதல் எங்களுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர் எனக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிவிட்டது நான் தகவல் பலகையில் இன்றைய சொல் என்ற தலைப்பில் பிறருக்கு நம்பிக்கை தரும் வாசகங்களை எழுதுவேன் அக்கா அன்றைய நிகழ்வுகளை பற்றி எழுதுவார் இரண்டு வருடங்களாக எழுதி இருந்த எங்களுக்கு தொலைக்காட்சி பேட்டிக்கு பின் ஒரு வருடமாக ஆக மூன்று வருடங்களாக இச் செயலை செய்து வருகிறேன் இப்படி நான் கரும்பலகையில் எழுதுவதும் திருக்குறள் சொல்வதுமே என் வாழ்க்கையின் திருப்புமுனையாக எனக்கு அமைந்தது நான் திருக்குறள் மட்டுமன்றி கவிதை பாடல் நடனம் அப்போது நடந்த ஏதாவது ஒரு நிகழ்வு பற்றியும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் பேசி தினமும் வாட்ஸப்பில் அனைவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் செய்தித்தாளில் எங்கள் பேட்டி வந்த இந்த நிகழ்வே என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
எந்த ஒரு செயலையும் நாம் முயற்சியுடன் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் செய்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் நன்றி
-கமலேஷ்
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞