நானும் என் வாசிப்பும் - பரத்வாஜ்

 


புத்தகங்கள் வாழ்கையை புரட்டிப்போடுமா? நவீன உலகில் புத்தகங்கள் தொடருமா?? 

    6174 இந்த எண்ணால் ஈர்க்கப்பட்டேன். முதலில் அதை இணையத்தில் தான் படித்தேன். பிறகு தான் பள்ளி பருவத்தில் செய்தித்தாள்களையும், சிறுகதை புத்தகங்களையும் புரட்டிய நினைவுகள் வந்தன.. சில தயக்கங்களை தாங்கி சென்றாலும் வாழ்க்கை எனும் வாகனம் நிற்காமல் ஓடிக்கொண்டு தான் இருக்கும். அதன் பாதையில் புத்தகங்களின் வாசம் மிக ரமயமானது..!! தாய் மொழி, அறிவியல், விஞ்ஞானம், சமூக பொறுப்புணர்ச்சிகள் நிறைந்த புத்தகங்கள் காலம் அறியாத மாபெரும் பொக்கிஷங்கள். அன்று களைப்பார இணையத்தில் புத்தகம் படித்த எனக்கு, வருடம் நான்கு புத்தகப் பிரதிகளாவது வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றியது. சிந்தனைகள் சிதைந்தலும் சீரமைத்து செங்கோலூன்றிட சின்னமாக அப்புத்தகங்களே இருக்கும் என்ற பெரும் நம்பிக்கை, என் வாழ்வில் புத்தகங்களை மேலும் வாசிக்க தூண்டியது. நான்கு எண்ணில் மீண்டும் பூத்த எனது ஆவல், பல சோகங்களை மறக்கடிக்க செய்தது. எளிய வழிகளை, எண்ணற்ற சிந்தனைகளை தோற்றுவித்து ஊக்கமளித்தது. புதிய புத்தகம் மட்டுமன்றி பழைய புத்தகங்களின் வாசமும் என்னை சொர்கத்திற்கு அழைத்து சென்றது. என் வாழ்வின் பெரிய திருப்பமாக அமைந்த புத்தகங்களின் வருகை, காலம் சென்ற கவியரசர்களின் வரிகள் எல்லா மக்களின் வாழ்வையும் மாற்றியமைக்க கூடியது.. பார்பவரிடத்தில் எல்லாம் பயமின்றி பழக, பலவற்றை பகிர புத்தகங்கள் துணை நிற்கும். கற்போம், கற்றதை கற்பிப்போம், கற்றவழி நிற்போம்..!!

 

 

- பரத்வாஜ்.

 

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post