நான் பார்த்ததிலே
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பயணம் சென்ற இடம்
- இடத்தின் சிறப்பு
- முடிவுரை
முன்னுரை:
“நான் பார்த்த்திலே”
சிறந்த இடம் நம் நாட்டில் அமைந்துள்ள கல்லணையாகும். விடுமுறையில் கல்லணைக்கு சென்ற போது நான் பார்த்து ரசித்த அனுபவத்தை இக்கட்டுரையில்
காண்போம்.
பயணம் சென்ற இடம்:
நான் பயணம் சென்ற இடம் திருச்சிக்கு மிக அருகில் உள்ள கல்லணை ஆகும். இக்கல்லணை உலகின் மிகப்பெரிய அணையாகும். இது பழந்தமிழரின் தொழில்நுட்பத்திற்கு சான்று ஆகும். இக்கல்லணை திருச்சியில் இருந்து 20கி.மீ தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு நாங்கள் பயணம் சென்று வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
இடத்தின் சிறப்பு:
இந்த அணை கரிகாலன்
என்ற சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்த அணையே உலகின் மிகப்பழமையான
நீர்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம்
அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப்
புகழப்படுகிறது.
கல்லணையின்
நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும்
உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த
அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருகிறது. இது
அதிசியமாகும், பல இடங்களிலிருந்து ஏராளமானோர் இவ்வணையைக் காண
தினந்தோறும் இவ்விடத்திற்கு வருவதால் இது ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
கல்லணை பற்றி சங்க கால சான்றுகள்:
சங்க காலத்தில்
கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கை கட்டுபடுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை
உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும்,
திருவாலாங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.
பாசன காலங்களில்
காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும்,
வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும்..
அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம்
ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின்
பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது.
“மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராகாள்
கண்கொண்ட சொன்னிக் கரிகாலன்”
2000 ஆண்டுகளுக்கு முன்பு
களிமண்ணால் கட்டப்பட்டது இக்கல்லணை.
இடத்தின் வரலாறு:
தமிழர்களின்
பெருமையை உலகறிய செய்தவர்கள் சோழர்கள். அச்சோழ மன்னர்களில் முற்கால
சோழன் என்று அழைக்கப்படும் கரிகால சோழனால் கட்டப்பட்டதே இந்த கல்லணை ஆகும்.
எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலக்கட்டத்தில், காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைப் போட்டு, பாறைகளை
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, களிமண்ணால் பூசி அமைந்ததே இக்கல்லண
ஆகும். கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர்
காட்டன், பழந்தமிழரின் அணைக்கட்டும் திறமையும், பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்து கூறினர். டெல்டா
மாவட்டத்தின் இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது.
முடிவுரை:
“நான் பார்த்ததிலே”
மிகவும் பயனுள்ள இடமாக இக்கல்லணை உள்ளது. விவசாயிகளின்
துயரத்தை இன்றளவும் இக்கல்லணைப் போக்கிக் கொண்டு வருகிறது. இங்கு
பயணம் மேற்கொண்டு பார்த்த்து மகிழ்ச்சியாக உள்ளது.
-ஞா.அபர்ணா
திருவாரூர்
மாவட்டம்
For our regular
updates follow us in social media platforms.
Facebook Twitter Instagram
YouTube
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞
Congratulations abarna🤩😍 go ahead and keep rocking sis🤩🥰😘
ReplyDeleteSuper ma��
ReplyDelete