நானும் என் வாசிப்பும் - ஜி.மிஜினா

 நானும் என் வாசிப்பும்

முன்னுரை:

            என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்; வாசிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஏனென்றால் புத்தக வாசிப்பு என் வாழ்க்கையை அழகாக மாற்றிவிட்டது என்றே கூறுவேன். அதனை பற்றி தங்களிடம் கூறபோகிறேன், ஆதலால், “நானும் என் வாசிப்பும்என்ற தலைப்பை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பள்ளியில் வாசிப்பால் நான் அடைந்த பயன்:

சில பேர் புத்தகம் வாசிப்பது கடுப்பாக உணர்வார்கள் ஆனால் புத்தகம் நம்மை வாழவைக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் புத்தகம் தான் என்னை சமுதாயத்தில் நல்ல பெயருடன் நன்றாக வாழ வைக்கிறது எப்படி என்றால் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே பாடப்புத்தகங்களை விடாமல் படித்துக் கொண்டே இருப்பேன். இப்போது வரைக்கும் அப்படிதான் படிக்கிறேன்,  இதனால் என்ன பயன் என்று பார்த்தால் நான் பாடப்புத்தகங்களை விடாமல் படிப்பதால் எனது அறிவு வளர்வது மட்டுமன்றி நான் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து அனைவரின் முன் நட்சத்திரமாக திகழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் நன்றாக புத்தகம் வாசிப்பதால் எனது பள்ளியில் நிறைய போட்டிக்கும், நிகழ்வுக்கும் அனுப்புகிறார்கள். அதன் மூலம் எனக்கு பணமும் கிடைத்தது. இதெல்லாம் எதனால் நிகழ்கிறது என்று பார்த்தால் அது என் புத்தகம் வாசிப்பால் மட்டுமே என்று ஆணித்தரமாக கூறுகிறேன்.

இப்போது பாடப்புத்தகத்தை தவிர பொதுவாக அனைத்து புத்தகங்களை வாசிப்பதால் நான் பெரும் பயனை அடைந்து விட்டேன் என்றே கூறலாம். எப்படி என்றால் நான் பொதுவாக புத்தகம் வாசிப்பதால் நிறைய பொது அறிவை கற்றுக் கொண்டேன். அது எனக்கு நன்றாகவே அமைந்தது நான் நிறைய போட்டிகளிலும் கலந்து கொண்டேன். தற்போது (on the spot) வினாடி-வினா நடக்கும்போது நான் நிறைய வெற்றிகளை கண்டேன். பரிசும் குவிந்தன ஆர்வம் அதிகமாயின, இன்னும் கட்டுரை, கவிதையிலும் என் அறிவைப் பயன்படுத்தி கலந்து கொண்டு பணத்தை வென்றேன். திறமை வளர்ந்ததால் மாநில விருதுகள் என்னை தேடி வந்தது. அதனால் நானும் படிப்படியாக உயர்ந்தேன் இதற்கெல்லாம் மூல காரணம் எது என்று பார்த்தால் அது என் புத்தக வாசிப்பு தான். என்னை போல் வாழ்க்கையில் நீங்களும் புத்தகம் வாசித்தால் உச்ச நிலையை அடைவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

வாசிப்பால் என் உள்ளங்கையில் உலகம்

நான் நன்றாக வாசித்துக் கொண்டே இருந்தால் உள்ளங்கையில் உலகம் இருக்கும். தற்போது எல்லோரும் கைபேசி வைத்திருந்தால் உள்ளங்கையில் உலகம் என்று கூறுவார்கள். ஆனால் அது அல்ல உண்மை. உண்மை என்னவென்றால் புத்தகம் வைத்திருந்து அதை வாசித்தால் தான் நம் உள்ளங்கையில் உலகம் என்று நாம் பெருமையாக கூறிக் கொள்ள முடியும். நான் புத்தகம் வாசிப்பது எனக்கு நல்ல பல அரிய நிகழ்வுகள் தெரிகிறது நான் நிறைய கற்றுக் கொள்கிறேன் ஆதலால் என் உள்ளங்கையில் உலகம் அடங்கி விடுகிறது.

புத்தகம் வாசிப்பில் அனுபவம்:

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்தித்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்பார் ஆபிரகாம் லிங்கன். அதேபோல்தான் எனக்கு பிடித்த நான் வாசிக்காத ஒரு புத்தகத்தை எனக்கு அளிப்பவனே என் அருமை நண்பன். என்னுடைய புத்தக வாசிப்பு அனுபவம் என்பது ஒரு இனிப்பான சம்பவமாகும் நான் நிறைய கதை புத்தகம், நாவல் மற்றும் சங்க கால நூல்கள் அனைத்தையும் விரும்பி படிப்பேன், கதை புத்தகத்தை படித்தால் களிப்புறுவேன்; நாவலைப் படித்தால் நன்றாக உணர்வேன்; சங்ககால நூலைப் படித்தால் சாந்தமாக உணர்வேன்; இப்படி அனைத்து புத்தகத்திலும் ஒவ்வொன்றும் உணர்வேன். கதையை படிக்க படிக்க மூளை சுறுசுறுப்பாயின; நாவலை படிக்க படிக்க புதிர் விடுவிக்கப்பட்டன; ஆனால் சங்ககால புத்தகத்தை படித்தேன் அனைத்தையும் கற்று அதில் இல்லாதது எதுவுமே இல்லை என்றே கூறுவேன். சங்ககாலத்திலேயே அனைத்தையும் நம் தமிழ் புலவர்கள் கணித்து எழுதி விட்டனர் என்றே கூறுவேன். நம் திருக்குறள் நூலில் ஆதி முதல் அந்தம் வரை இருக்கிறது. ஒழுக்கம், உணவு, மருந்து போன்ற அனைத்தும் அதில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் அக்காலத்தில் எழுதப்பட்ட திருக்குறளில் உலகம் உருண்டை, பூமி சுழல்கிறது என்று முன்கூட்டியே கணித்து கூறப்பட்டுள்ளன மேலை நாட்டுக்காரர்கள் இதைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இந்த புத்தகத்தை பார்த்து நானும் அப்படித்தான் செய்தேன். இதுவே இந்த புத்தகத்தை நான் வாசித்தது பற்றிய அழகான அனுபவம் ஆகும். இதுபோன்று நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை புகட்டுகின்றன. நான் வாசிக்கும் புத்தகம் எனக்கு மன வளத்தை ஏற்படுத்துகின்றன இசையை போன்றே இதயத்தை புத்தகங்கள் பண்படுத்துகின்றன தொட்டுப்பார்த்தால் காகிதம் படித்துப் பார்த்தால் ஆயுதம் என்பது போல் புத்தகம் ஆயுத அனுபவமாக விளங்குகிறது புத்தகமே என்னை சீர்திருத்தும் நண்பனாக விளங்குகிறது. உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தகம் வாசிப்பு என்று கூற்றுக்கிணங்க புத்தகத்தை நான் வாசிப்பேன். அதன் பிறகு நான் பூங்காற்று மின்னிதழ் என்னும் புத்தகத்தை நான் விடாமல் மாதம்தோறும் வாசித்துக் கொண்டே இருப்பேன் ஏனென்றால் அதில் விறுவிறுப்பான கதை போட்டி நகைச்சுவை போன்றவை சுவாரசியமாக இடம்பெற்றிருக்கும் அதைப் படித்தால் பொழுது போவதே எனக்கு தெரியாது, அப்படி ஒரு இன்பம் ராஜாஜி ஒரு சகாப்தம் என்னும் புத்தகம் நான் படிக்கும்போது ராஜாஜி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொண்டேன். மதுரைக் காஞ்சி என்னும் நூலையும் வாசிக்கும்போது மதுரையை பற்றிய சிறப்புகளை நான் அறிந்து கொண்டது ஒரு சிறப்பான அனுபவம் ஆகும். காந்தியின் சத்திய சோதனை என்னும் புத்தகத்தை வாசிக்கையில் காந்தியின் வாழ்க்கைக்குறிப்பு போராட்டங்கள் தியாகங்கள் மற்றும் சுதந்திரம் போன்ற கருத்துக்களை உணர்த்தியது சிறந்த அனுபவமாகவும். கலாமின் அக்னி சிறகுகள் எனும் புத்தகத்தை வாசிக்கும்போது எனக்கு சிறகுகள் முளைத்தது அனைத்தையும் புரிந்து கொண்டேன் வானத்தில் பறந்தேன். காடு என்னும் குறு நாவலை வாசிக்கும்போது நான் பசுமையான காட்டில் இருப்பது போன்று உணர்ந்தேன் சிலுசிலுவென கொட்டும் அருவி, கூவும் குருவி பறவைகளின் சத்தம் மூலிகையின் வாசம் போன்றவற்றை அந்த புத்தகம் கண்முன் காட்டியது ஒரு நல்ல அனுபவம் ஆகும். ஒழுக்கம் எனும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் புத்தகத்தை வாசிக்கையில் எங்கு எப்படி எப்போது நல்ல பண்புடன் நடக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். வீட்டில் வெளியில் சான்றோர்கள் இடத்தில், பெரியவர்களிடத்தில் மற்றும் சுய ஒழுக்கம் போன்றவற்றை அவரிடத்தில் எப்படி கடைப்பிடிக்க என்பதை அந்த புத்தகத்தில் வாசித்து தெரிந்து அனுபவம் அருமையாக இருந்தது. நான் லிப்கோ என்னும் அகராதியை வாங்கி விரும்பி வாசித்தேன் அதன்மூலம் ஆங்கிலத்தையும் தமிழையும் சரளமாக கற்று சமுதாயத்தில் பேர் பெற்றேன். இப்படிப்பட்ட அறிவு பெட்டகம் கிடைத்தது ஒரு அற்புத அனுபவமாகும். கல்கண்டு என்னும் புத்தகம் சிறியதாக இருந்தாலும் நிறைய புதிய தகவல்களை அள்ளித்தரும் இரவில் பயம் ஊட்டக் கூடிய அளவு பல கதைகளை வாசித்து சுவாரசியமான அனுபவமாகும். கல்கி என்னும் புத்தகத்தை அதிகமாக வாசிக்கும் போது அது ஆன்மீக அறிவை தந்தது மிக நல்ல அனுபவம் ஆகும். சாண்டில்யனின் புத்தகத்தை வாசிக்கும்போது தமிழ் இலக்கியங்கள் தந்த தெளிவின் மூலம் வர்ணனைகளை புரிந்து கொண்ட அனுபவம் சிறப்பானதாகும். புத்தக தேவதையின் கதை என்னும் புத்தகத்தை வாசிக்கையில் 2003 இல் அமெரிக்காவால் ஈராக்கின் மீது நடத்தப்பட்ட படுபயங்கரமான தாக்குதலின் போது நூலகத்தில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அறியாமல் காப்பாற்றிய ஆலியா முகமது என்ற பெண்மணியை முக்கிய கதாபாத்திரமாக கொண்டுள்ள இப்புத்தகம், புத்தகத்தின் மேல் அன்பு கொண்டு அதை காப்பாற்றியவள் பற்றி கூறுவதை தெரிந்து கொண்ட அனுபவம் மிகச்சிறந்த ஒன்றாகும்.

முடிவுரை:

என் புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பற்றி தங்களிடம் பகிர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் போன்று அனைவருக்கும் புத்தக வாசிப்பு அனுபவம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள் புத்தகத்தை தொடர்ந்து எப்போதும் விடாமல் அன்றாட பழக்கமாக வாசியுங்கள் வாசியுங்கள் என்று கூறி எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

 

- ஜி.மிஜினா

 

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post