நான் பார்த்ததிலே - நித்ய ஸ்ரீ

 


நான் பார்த்ததிலே

 

குறிப்புச்சட்டகம்

  • முன்னுரை
  • தோற்றம்
  • பார்த்து மகிழ்ந்தவை
  • அரசாங்க விளம்பரங்கள்
  • வானிபம் செழிக்க
  • கலை வளர்ச்சி
  • முடிவுரை

 

முன்னுரை:

            கண்ணால் கண்டு மகிழ்வதற்குரிய கலைப் பொருட்களும், இன்பப்பொழுது போக்கும் நிறைந்த இடமே கண்காட்சி ஆகும். அத்தகு கண்காட்சிகள் அரசாலும் நகராண்மைக் கழகத்தாலும் நடத்தப்படுகின்றன. அன்மையில் நான் கண்டு மகிழ்ந்த நெல்லைக் கண்காட்சி நிகழ்ச்சிகளை உங்கள் முன் படைக்கிறேன்.

 

தோற்றம்:

            வண்ண விளக்குகளும், ஒலிபெருக்கியின் இன்னிசையும் வருவோரை வருக! வருக! என அழைத்துக் கொண்டிருந்த அரங்கத்துள் சீட்டுப் பெற்று உள்ளே சென்றேன். உள்ளே சென்றதும் எங்கோ இனம் புரியாத இன்ப உலகத்துக்குள் வந்து விட்ட்தாக நினைத்தேன். வரிசை வரிசையாக இருந்த கடைகளும் கடைப் பொருட்களும் முதலில் நல்விருந்து அளித்தன.


 


பார்த்து மகிழ்ந்தவை:

            அங்கே நான் கண்டு களித்த காட்சிகள் பல, முதலில் சின்னஞ் சிறியதொரு சர்க்கசைக் கண்டு களித்தேன். வான்வெளி வீரர்கள், காட்டு மிருகங்கள், நீர் அழகி போன்ற காட்சிகளை காசு கொடுத்துப் பார்த்து மகிழ்ந்தேன் மரணக் கிணற்றில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் சுழன்று வந்த காட்சி உள்ளத்தை உலுக்குவதாக அமைந்துருந்தது. ஆகாய ராட்டினத்தில் ஏறிச் சுற்றினேன். உலகமே சுற்றுவது போலிருந்தது. பின்னர் குழந்தைகள் இரயிலிலும், குடை ராட்டினத்திலும் ஏறி இன்பமாகச் சுற்றி வந்தேன்.

அரசாங்க விளம்பரங்கள்:

            கண்காட்சியில் கண்டு களித்தவற்றுள் அரசாங்க விளம்பரங்கள் மிகவும் பயனுள்ளனவாய் இருந்தன. பல்வேறு அணைத் திட்டங்கள், விவசாய வளர்ச்சித் திட்டங்கள், கைத்தொழில் முன்னேற்றத் திட்டங்கள் முதலியவற்றை விளக்கும் படங்களும், திரைப்படங்களும், மாதிரிப் பொருட்களும், கருவிகளும் பல்வேறு துறையினரால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்க்கும் போது அரசு நமக்காக நடத்தி வரும் திட்டங்களையும் அதன் நன்மைகளையும் சிறப்பாக உணர முடிந்தது.

 

வாணிபம் செழிக்க:

            வியாபாரம் செழிக்க கண்காட்சிகள் உதவுவதை நேரில் கண்டேன். பல்வேறு கடையினர் தங்கள் பொருட்களை விளம்பரபடுத்தினர். ஒலி பெருக்கி மூலம் பலருடைய வியாபார நிறுவனங்கள் விளம்பரபடுத்தப்பட்டன.

வியாபாரிகளுக்கும் சிற்றுண்டிச் சாலைகட்கும் கண்காட்சி ஒரு ஆதாயமான கருவியாகும். இங்கு பல அரிய பொருட்களை வாங்கவும், உண்டு மகிழவும் முடிகிறது.


 


கலை வளர்ச்சி:

            கலை வளர்ச்சிக்கும், கண்காட்சி பெரிதும் உதவுகிறது. பொருட்காட்சியில் சிறந்த நாடகம், இசைக் கச்சேரி, சொற்பொழிவு முதலியன நடைபெருகின்றன. நான் சென்ற நாளன்று டி.கே.எஸ் சகோதரர்களின் குழந்தைகளுக்கான பலாப்பழம் நாடகம் நடைப்பெற்றது. குழந்தைகளின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. அதனைக் காண ஆயிரம் கண் வேண்டும் போலும்!

முடிவுரை:

            இரவு இரண்டு மணியளவில் முடிந்த நாடகத்தைப் பார்த்து விட்டு நண்பர்களுடன் வீடு வந்து சேர்ந்தேன். கலை வளர்ச்சிக்கும், அரிய பொருள்களை காண்பதற்கும், அரசாங்கத்தின் விளம்பரங்களுக்கும், வியாபார வளர்ச்சிக்கும், இன்பப்பொழுது போக்குக்கும் பயன்படும் கண்காட்சிகளைக் கண்டு மகிழ்வோமாக!

 

-       நித்ய ஸ்ரீ

சென்னை


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post