TNPSC Current Affairs in Tamil 23-11-2022






1. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல்  பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது ,சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு ,கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள் ,பல்லுயிர் தன்மை மிக்க தாவரம்,விளங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கத்துக்காக அமைக்கக்ப்படுவதாகும்.அரிட்டாபட்டி கிராமம் என்பது 7குன்றுகளையுமம் தொடர்ச்சியாக கொண்டுள்ளது.72ஏரிகள் ,200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்புமுனைகள் உள்ளன.

அரிட்டாபட்டிகிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவை இனங்கள் உள்ளன.அரிய வகை வனவிலங்குகளும் உள்ளன.பல்வேறுபட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக இப்பகுதி உள்ளது.மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள் ,சமண படுகைகள் ,தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பு.இந்த அறிவிக்கை ,உயிரியல் மற்றும் வரலாற்றுக்  களஞ்சியத்தை பாதுகாக்க உதவும்.

2.'கனவு இல்லம் 'திட்டம் 10 எழுத்தாளர்கள் தேர்வு.தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ,நிகழாண்டில்  10  பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி ,சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களான ஜி.திலகவதி ,சு.வெங்கடேசன் ,எஸ்.ராமகிருஷ்ணன் ,ஆர் .என்.ஜோ.டி .குருஸ் ,சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன் ),கலைஞர் .மு .கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்றவர்களான பொன் .கோதண்டராமன்,ப .மருதநாயகம்,மறைமலை இலக்குவனார் ,கா.ராஜன் ,தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் இரா.கலைக்கோவன் ஆகிய 10 எழுத்தாளருக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது விரும்பும் மாவட்டத்திலோ வீடுகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

3.நவம்பர் 23 உவமைக்   கவிஞர் சுரதா பிறந்த தினம் இன்று.

4.FIFA-உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபிய வெற்றி.

5.இந்தோ -பசிபிக்  4-வது கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது.

6.ASEAN-INDIA DEFENCE MINISTERS' INFORMAL MEETING -கடல்சர் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த கூட்டம் இன்று கம்போடியாவில் நடைபெறுகிறது.



-Bakya

Receiver Team





TNPSC Current Affairs in Tamil 23-11-2022 TNPSC Current Affairs in Tamil 23-11-2022 Reviewed by Bakya on November 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.