TNPSC Current Affairs in Tamil 03-12-2022

1.இந்தியா -கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் - 4 ஆம் தேதி கொண்டாப்படுகிறது 1971-ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் போரில் இந்திய கடற்படையின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ,கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.கிழக்கு கடற்கரை பிராந்தியமான விசாகப்பட்டினத்தில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.


2.தமிழகத்தில் அனைத்துக் கோவில்களிலும் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை விதித்து உயர்நிதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


3.மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு ,தடையற்ற சூழலை அமைப்போம்  என முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி ,வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி :-ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் -3 ஆம்  தேதியன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளை சமுதாயாத்தில் ஒருங்கிணைந்து ,சம உரிமையுடன் ,வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து உரிய வாய்ப்பை  வழங்க உறுதி மேற்கொள்வோம் என்று தனது செய்தியில் முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


4.கரிசல் காட்டு இலக்கியத்தின் பிதாமகரான கி.ராஜநாராயணனுக்கு கோவில் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வர் மு .க.ஸ்டாலின்  வெள்ளிக்கிழமை காணொளி வழியாக திறந்து வைத்தார் .


5.உணவு வீணாக்கப்படுவதை குறைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.


                                                                                                                                              -Bakya

                                                                                                                                          Receiver Team








Previous Post Next Post