TNPSC Current Affairs in Tamil 1-12-2022

1.தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைப்பெற்ற 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் 40 பேருக்கு 5 பிரிவுகளில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு  விருதுகள் வழங்கி கௌரவித்தார். 

சரத்  கமல் 

விளையாட்டுத் துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது ,டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்டது.மனிகா பத்ராவுக்குப் பிறகு இந்த விருது பெறும் ஒரே டேபிள் டென்னிஸ் போட்டியாளர் இவர்.நடப்பாண்டில் இங்கிலாந்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சரத்,2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.காமன்வெல்த்தில் மொத்தமாக 13 பதக்கங்களும் ,ஆசிய போட்டிகளில் 2 வெண்கலமும்  வென்றிருக்கிறார்  சரத் கமல் .


பிரக்ஞானந்த

செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு  பெருமை சேரத்து வரும் இளம் வீரரும் ,தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரஞானந்தா  அர்ஜுநா  விருது பெற்றார்.நடப்பு ஆண்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 வெண்கலம் வென்றார்.நடப்பு உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனை ஒரே ஆண்டில் 3 முறை வீழ்த்திய ஒரே வீரராக இருக்கிறார் பிரஞானந்தா.

ஜெர்லின் அனிகா 

 


அர்ஜுனா விருது பெற்ற மற்றொரு தமிழக வீராங்கனையான ஜெரலின் அனிகா , கடந்த ஆண்டு காது கேளாதவர்க்கான ஒலிம்பிஸ் போட்டியில் (டெ ஃ ப்லிம்பிக்ஸ் -பாட்மின்டன் )தனிநபர் ,இரட்டையர் ,அணிகள் என 3 பிரிவிலும்மே தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


குருநானக் தேவ் பல்கலைக்கழகம்   மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது பெற்றுஉள்ளது.


2. தில்லியில் அடுத்த  ஆண்டு ஜனவரியில் நடை பெறவிருக்கும்  குடியரசு தின விழாவின்போது  எல்லைப்  பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப் ) ஒட்டகப் படை பிரிவு  அணிவகுப்பில் முதல் முறையாக  வீராங்கனைகளும் பங்கேற்று, ஒட்டகங்கள்  மீது கம்பீர சவாரி செய்யவிருக்கின்றனர்.  பாகிஸ்தான் ,வங்கதேசத்துடனான எல்லைப் பாதுகாப்புப் பணிக்கான கண்டனத்தை 1965,டிசம்பர் 1-இல் பிஎஸ்எஃப் -இன் நிறுவப்பது.அதன் 58-வது  நிறுவன தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது.


3.  ஜீ 20 நாடுகள் கூ ட்டமைப்பின் தலமைப் பொறுப்பை இந்தியா அதிகாரப்பூரவமாக டிசம்பர்-1. ஆம் தேதி ஏற்க்கவுள்ள நிலையில் ,இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணர்வை மேம்படுத்த பாடுபடுவோம் ;'ஒரே பூமி ,ஒரே குடும்பம் ,ஒரே எதிர்காலம் ' எம்பதை நோக்கமாகக் கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்தார். ஜீ 20 நாடுகள் கூட்டமைப்பின் கருப்பொருள் 'ஒரே பூமி ,ஒரே குடும்பம் ,ஒரே எதிர்காலம் '  ஆகும்.


4.முன்னாள் அமைச்சர் க .அன்பழகனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.க . அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்,
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கு கல்வி துறை ஆணையரக வளாகத்தில் (டிபிஐ) அன்பழகன் சிலை நிறுவப்படும்.மேலும்  அந்த வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்.


5.குஜராத் சட்டப்பேரவைத்த தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வியாழக்கிழமை டிசம்பர் -1 வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.


















































































Previous Post Next Post