Bharathiyaar

                                                         பாரதியார் 



 

சுப்ரமணிய பாரதியார் (டிசம்பர் )பதினோராம் நாளில் 1882-ஆம் ஆண்டு எட்டயபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.இந்த ஊர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது ,இவருடைய குழந்தை பருவ பெயர் சுப்பையா ஆகும்.இவரது தந்தை சின்னசாமி ,தாயார் லட்சுமி அம்மாள் ஆவார்.பாரதியார் ஏழு வயதில் தமிழக் கவிதைகளை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய பதினோராம் வயதில் அவருடைய படைப்புகள் மற்றும் திறைமைகள் கற்றறிந்த அறிஞர்களால் புகழப்பட்டது.பதினோராம் வயதில் சுப்பையா அனைத்து பெருமக்கள் மற்றும் அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் ஓர் சவால் விட்டார்.யாரேனும் என்னுடன் எந்தவித முன்னறிவிப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் பேச தயாரா?என சவால் விட்டார். இந்த போட்டி எட்டயபுர அரசவையில் ஓர்   சிறப்பு அமர்வாக எட்டயபுர அரசின் தலைமையில் நடைப்பெற்றது.சவாலில் தேர்தெடுக்கப்பட்ட தலைப்பு 'கல்வி 'ஆகும் . சுப்பையா பேச்சு போட்டியில் வென்றார்.இது  சுப்பையாவின் வாழ்க்கையில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது.இந்த மறக்க முடியாத நிகழ்வுக்கு பிறகு 'எட்டயபுர சுப்பையா 'என்று அழைக்கப்பட்ட அவர் 'பாரதி' என்றும் பிற்கலத்தில் பாரதியார் என்றும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.'பாரதியார் ' என்ற பெயர் அனைவராலும் குறிப்பாக தேசியவாதிகளாலும் உலகெங்கிலும் உள்ள கோடான கோடி  தமிழ்ப் பற்றலர்களால் மரியாதையுடனும் நினைவு கூறப்படுகிறது .ஜூன் 1897 - இன் பாரதியாருக்கு பதினைந்து வயது நிரம்பியிருந்த போது செல்லம்மாளுடன் திருமணம் நடந்தது.இதன் பிறகு பாரதியார் காசிக்கு சென்றார்.அங்கு  தனது அத்தை குப்பாள் மற்றும் மாமா கிருஷ்ணசிவனுடன் இரண்டு ஆண்டுகள் இருந்தார்.அங்கிருந்த போது தான் சமஸ்கிருதம் ,இந்தி ,மற்றும் ஆங்கி மொழியறிவினை பெற்றார். 

 



Previous Post Next Post