பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் - எப்படி இருக்கு ? - Ponniyin Selvan -2 Review

Ponniyin Selvan -2
Ponniyin Selvan -2 

 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகச்சிறப்பாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது அதைப்பற்றி நாம் இங்கு காணலாம் இந்த திரைப்படம் இரு பாகமாக வெளியிடப்பட்டது.

முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி சந்தித்தது அது மட்டுமல்லாமல் அமரர் கல்கியின் மிகச் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி எடுத்த இந்த திரைப்படம் புத்தக வாசிப்பாளர்களையும் மட்டுமல்லாமல் புதுமையாக அந்த கதையை பார்ப்பவர்களுக்கும் மிகச் சிறப்பாக புரியும் படி அந்த திரைப்படம் வெளியானது.    இப்போது இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு இரண்டு நாட்கள் 100 கோடி தாண்டி வசூலை பிடித்துள்ளது இந்த திரைப்படம் ஒரு காவியம் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் வேறு எவராலும், நிறைய பேர் முயற்சி செய்தும் இந்த காவியத்தை திரைப்படமாக எடுக்க முயன்றும் அது முடியாத முயற்சி ஆகவே இருந்து கொண்டிருந்தது. ஆனால் மணிரத்தினம் அவர்கள் இந்த திரைப்படத்தை இரண்டு பாகமாக எடுத்து இரண்டு பாகத்தையும் வெற்றி படமாக மாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரேமையும் மிக அழகாக அருமையாக செதுக்கி உள்ளார் இந்த திரைப்படத்திற்கு இன்னும் ஒரு பக்கபலம் என்னவென்றால் திரு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் மிகச்சிறந்த இசையையும் மிகச் சிறந்த பேக்ரவுண்ட் ஸ்கோரையும் இந்த திரைப்படத்திற்கு அளித்திருக்கிறார்.

Ponniyin Selvan -2 


அது மட்டுமல்லாமல் அதில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரத்திற்கும் மிகச் சிறப்பாக அவர்களுக்குரிய நேரத்தையும் அவர்கள் கூறிய ஸ்கிரீன் ஸ்பேசையும் அவர்கள் கொடுத்திருக்கிறார் என்னதான் படத்தில் பார்த்தாலும் புத்தகம் படிக்கும்படி இருக்காது என்று சொல்வார்கள் பலர் உண்டு இங்கே. ஆனால் குறிப்பிட்ட இந்த திரைக்குள் எத்தனை விஷயங்களை காட்ட முடியுமோ அத்தனை விஷயங்களையும் மிகத் தெளிவாக மிக அருமையாக மேம்படுத்தப்பட்ட ஒரு நிலையில் நம் அனைவருக்குமே மணிரத்தினம் அவர்கள் நமக்கு திரைக்காவியமாக இந்த பொன்னியின் செல்வனை கொடுத்து இருக்கிறார். இதில் நடித்த அனைத்து நடிகர்களும் குறிப்பாக ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் அவர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் ஜெயம் ரவி அவர்கள் கார்த்தி திரிஷா மற்றும் ஐஸ்வர்யா இன்னும் பல நடிகர்கள் இதில் பங்கேற்றனர் பார்த்திபன் அவர்கள் பிரகாஷ்ராஜ் போன்ற மிகச் சிறந்த நடிகர்களும் இந்த படத்தில் மொத்தத்தில் இந்த திரை காவியத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அனைத்து நடிகர்களும் அவரவர்களுக்குறிய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக ஏற்புடையதாக நம் கண் முன்னே காட்டியுள்ளனர்.

Ponniyin Selvan 2


     இந்த திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்டுவது அந்த ஒளிப்பதிவு தான் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு ஃபிரேமிலையும் அவ்வளவு அழகா நம்ம கதையில பார்த்த, படித்த அத்தனை விஷயங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குனர்கள் அனைத்திற்கும் மேலாக இந்த படத்தில் எனக்குத் தெரிந்து மிக கடினமாக உழைத்து இருப்பவர் எடிட்டர் தான்.

Ponniyin Selvan 2 Cast & Crew


    ஏனென்றால் ஒவ்வொரு காட்சிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு தாவும். அவர் மிகவும் சிரமப்பட்டு இருப்பார் என்று எங்கள் குழுவின் ஒரு கருத்தாக உள்ளது ஏனென்றால் இந்த கதையானது 100 மணி நேரத்திற்கும் எடுக்கலாம் அப்படிப்பட்ட ஒரு கதை .ஆனால் அந்தக் கதையை 6 மணி நேரத்தில் குறைத்த மிகச்சிறந்த ஒரு பெருமை இந்த திரைப்படத்திற்காக பணிபுரிந்த படத்தொகுப்பாளர் அவர்களுக்கு மட்டுமே சாரும் மொத்தத்தில் இந்த திரைப்படம் புத்தகம் படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் படிக்காதவர்களுக்கும் மிகச் சிறந்த திரை விருந்தாகத்தான் இருக்கும் என்பது எங்கள் ரிசிவர் குழுவின் ஒரு கருத்தாக வைக்கின்றோம் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

✍Receiver Team

#PonniyinSelvan #PS2 #ponniyinSelvan2 #Maniratnam #ARR #ARRahman
Previous Post Next Post