லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் அதிகாரபூர்வ அறிவிப்பு


      லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் இளம் இயக்குனர். இவர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி இந்த இரண்டு திரைப்படமும் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். அதன் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி வெளிவர காத்துக்கொண்டிடருக்கும் வேலையில். நேற்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த திரைபடத்தின் அறிவிப்பை வெளியிடுடுவதாக அறிவித்திருந்தார்.

        இன்று 16-09-2020 மாலை தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதனை அவரது டிவிட்டர் பக்கத்தில் #Kamalhaasan232 என்று பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

        உலகநாயகனின் ரசிகரான லோகேஷ் தனது நாயகனுக்கு எப்படிப் பட்ட கதையை உருவாக்கியுள்ளார். மீண்டும் திரையில் உலகநாயகன் அவர்களை பார்க்க அதிலும் லோகேஷ் இயக்கத்தில் காண மிக ஆவலாக உள்ளனர் அவரது ரசிகர்கள். இந்த ஊரடங்கு முடிந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கும் அந்த நாட்களுக்காக சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் அதிகாரபூர்வ அறிவிப்பு லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் அதிகாரபூர்வ அறிவிப்பு Reviewed by receiverteam on September 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.