ப்ளே ஸ்டோருக்கு போட்டியா பேடிஎம் மினி ஸ்டோர்

     கடந்த மாதம் செப்டம்பர் 18 அன்று இந்தியாவின் மிக அதிகமாக பயன்படுத்தபடும் வணிக செயலியான பேடிஎம் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு கூகுல் நிறுவனம் கூறிய காரணமானது கேஷ்பேக் எனும் பெயரில் விளையாட்டை வைத்து சூதாட்டம் போன்று நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.              பின்பு பேடிஎம் நிறுவனம் விளக்கம் தந்த பிறகு மீண்டும் ப்ளே ஸ்டோரில் இணைக்கப்பட்டது. தற்போது பேடிஎம் நிறுவனம் பேடிஎம் மினி - ஆப் என்ற புது ஆப் ஸ்டோரை நிறுவ உள்ளது. இதனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தயாரிப்பை வளர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.இந்த திட்டத்திற்கு ரூபாய் பத்து கோடி நிதியை பேடிஎம் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.         இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் உலகில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவாக வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். தங்கள் நிறுவன செயலியை நீக்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே தனியான ஆப் ஸ்டோரை உருவாக்க திட்டமிட்டு கூகுள் நிறுவனத்திற்கு நேரடியாக சவால் விடுகிறது பேடிஎம் நிறுவனம்.

போட்டியில் தான் புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றது. பொருத்திருந்து பார்ப்போம்.

-Receiver Team📞  


#Paytm #GooglePlayStore #PaytmMiniApp #VijayShekarSharma

ப்ளே ஸ்டோருக்கு போட்டியா பேடிஎம் மினி ஸ்டோர் ப்ளே ஸ்டோருக்கு போட்டியா பேடிஎம் மினி ஸ்டோர் Reviewed by receiverteam on October 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.