நானும் என் வாசிப்பும் - சாந்தி சரவணன்

 


 

நானும் என் வாசிப்பும்

 

 

"நானும் என் வாசிப்பும்" நான் வாசித்த "ஆதுர  சாலை" புத்தகம் பற்றிய அனுபவ கட்டுரை.

 

ஆதுர சாலை  - ஆலை   (முதல் எழுத்து ""-கடைசி எழுத்து "லை")

 

இந்நாவல் ஒரு மருத்துவ ஆலைஆலையில் கரும்பு சாற்றையும்  அதனுடைய சக்கையையும் பிரித்து தருவது போல் ஆதுர சாலை நாவல் எது மருத்துவம் எது ஆரோக்கியம் என பிரித்து வாசகர்களுக்கு தருகிறது

 

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் ஜோடியாகவே படைக்கப்பட்டுள்ளது.            ஆண் -பெண், கரு - உருஇரவு - பகல், வெற்றி - தோல்வி, இன்பம்-துன்பம்அது போல் இந்நாவலும் வெப்பம் - குளிர்ச்சி என இரு பாகங்களாக படைக்க பட்டுள்ளது.

 

பன்முக துறை சார்ந்த தகவல்களின் தொகுப்பு இந்நாவல். உளவியல்உடலியல் உணர்வியல்தொல்லியல்அறிவியல், கலை, மருத்துவம், பயணங்கள்என ஆசிரியரின் பன்முகத்தன்மையின் பிரதிபலிப்புஆசிரியர், அன்பு இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் நம்மோடு பயணித்து வருகிறது.

 

நாவலின் மையம்  ஒரே வரியில்மருத்துவத்துறையின் ஆணிவேரே அழுகிப் போயிருக்கு

 

"வேலைக்காரன்படத்தில் வரும் ஒரு காட்சி. விசுவாசம். அதை எப்படி நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கும்துறை சார்ந்த நபருக்கு தான் அத்துறையில் நடக்கும் சாதக பாதகங்கள் தெரியும். அதை அவர்கள் தான் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்கல்வி, மருத்துவம் என்பதும் நிறுவனமாகி  மாறி போனது தான் அவலம்.

 

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று  ஒன்று இருப்பது இயல்பு தானே. இதில் மருந்துகளை உட்கொண்டு மரணத்தை ஏன் மனித குலம் தழுவ வேண்டும். இறப்பு, மரணம் இரண்டிற்கும் இடையே இருக்கும் வேற்றுமையை அறிய முடிகிறதுபெரும்பாலும் சமூகத்தில் மரணமே நிகழ்கிறது என்பதை உணர்த்துகிறது.  இறப்பை தள்ளி போடவும் முடியாது, இறப்பே இல்லாமல் வாழவும் முடியாது. ஆயுசு உள்ளவன் பிழைப்பான், ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை என சொவவடை உண்டு. மனம் ஏனோ இதை ஏற்க மறுக்கிறது.

 


அலோபதி, ஆய்வு கூடங்கள்  வணிகமயமாக மாறிவிட்டதுமருந்து நிறுவனங்கள் மருந்து மாஃபியாவாக மாறியுள்ளது.

 

மக்களிடையே  மரபு வழி மருத்துவ  விழிப்புணர்வு அவசியம். இந்த வருடம்  கொரோனா அதை மக்களிடையே நினைவுட்டியதை நாம் அறிவோம்.

 

சிந்தித்து பார்த்தால் சமிபத்தில் பல செய்திகளை பார்க்கிறோம்அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இட பக்கம் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கம் செய்ய பட்டுள்ளது. காசுக்காக எதையுமா செய்ய துனிஞ்ச மனுசங்க அதிகமானது மாதிரி தோனுது. “நேரம் எனும் எண்களின் பின்னாலும் பணம் எனும் எண்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. மனதிற்கு பிடிக்காத எந்த வேலையும் செய்யக் கூடாது  பிடித்தவற்றை செய்தால் சிறப்பு. மனித சுழற்சிக்கு முக்கிய காரணம் பசி. ஆனால் இன்று பசியையே மறந்து பணம் பின்னே சென்று விட்டோமே

 


நோயறிதல் முறை, நாடி பார்த்தல் எல்லாம் மறுவி ஆய்வு கூடங்கள் முடிவுகளை சார்ந்தே  மருத்துவம் அமைகின்றது

 

இந்நாவல் திசைகளையும், தொல்லியல் சான்றுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது அருமை

 

அம்மா சும்மா வீட்ல சும்மா தான் இருக்காங்க. நாம் உணராத ஆயிரக்கணக்கான வேலை விட்டில் இருக்கிறது. எப்படி அம்மா செய்யற வேலையை நம்மால்  உணர முடிவதில்லையோ  அதே போல் உடல் என்னும் மருத்துவர் செய்யும் வேலையையும் நம்மால் உணரமுடிவதில்லை.

 

மருந்தோ மருத்துவமோ நோய்களை குணப்படுத்துவது இல்லை. நோய் எதிர்ப்பு  சக்தியும், நோயாளியின் நம்பிக்கையும் தான் குணப்படுத்தும். 

 

இது புரிந்தால், மருத்துவமனை இனி அவசியமில்லை.

 

ஆங்கில மருத்துவத்தில் இருந்து ஆசிரியர்  விலக மையக் காரணிகள்.

 

1.மருத்துவ வணிகம்

2.நோயறிகுறிகள் அணுகுமுறை

3.மருந்து வேலை செய்யும் விதம்

4.ரசாயனம்

5.அறிவியல் நிருபிக்கப்படாதது

 

64 உத்திகளை கொண்ட  சித்த மருத்துவம் மறைக்கப்படாமல் அங்கிகாரம் அளிக்கப்பட வேண்டும். “அழிஞ்சு போன  ஒரு பெரிய மருத்துவத்தின் மிஞ்சிய துகள் தான் அவை...”.  என்றார் அன்புஅந்த துளிகளையும் தொலைக்காமல் நமக்குஆதுர சாலைஅளிக்கிறது 

 

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவர்கள் அதுபோல நம் உடலும். நமக்கு பார்க்கப்படும் வைத்தியமும் அவ்வாறே

 

ஆதிபட்டர்கள் மழு நேர மருத்துவர்கள் என்றால் மருத்துவம் ஒரு புதாகார துறையாக உருவாகாமல் வாழ்வியிலில் ஒர்  பகுதியில் இருந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

 

டாக்டர் அன்பு சொல்லி வருகிற   சித்தர் அகத்தியர், போகர், திருமூலர்கொங்கணவர், நாகமுனிங்கிற பாம்பாட்டி சித்தர்,தன்வந்திரி, சிவவாக்கியர் இவர்களை நம் சந்ததியினர் அறிய வாய்ப்பு இருக்குமோஇவர்கள் வழங்கிய  பொக்கிஷங்களை  கல்வி  அவர்களுக்கு தருமோ தெரியவில்லை ஆனால்  "ஆதுர சாலை" ஆவணமாக நமக்கு தந்துள்ளது.   

 

எட்டு வகையான நோயறிதல் அறிவு அழிஞ்சு போயி மிஷின்களை நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. கடைசியில் மிஷின்கள் நம்மை ஆள்கிறது. இந்நிலையில் இருந்து நாம் மீண்டு வரவேண்டும்.

 

அன்பு கிளினிக்கில் எப்படி "பொது பணம்" என அன்பு சொல்கிறாறோ அதுபோல இயற்கையும், மனிதனைப் போல ஒரு அங்கம் தான்நாம் அனைவரும் நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பொது இயற்கையை சுயேட்சையாக இயல்பில் விட்டுவிட்டால் எத்தனை சுகமாக இருக்கும்.  நம்ப மனசும் மருந்தோட குணமும் சேரணும் சமைப்பது போல். குணம் சேர்ந்தால் குணமாகுவது இயல்பு என்பதைக் குறிக்கிறது.  மனசுக்குள் உருவாகும் தியரி தான் ஒரு செயலின் முழுமைஇதை அறியாமல் தியரி பின் அலைகிறோம், அலைகழிக்கபடுகிறோம்

 

நாடி பார்க்கும் முறை நோயாளிகளின் கை வானம் பார்த்தபடி மருத்துவரின் கை பூமிபார்க்கும் படி என்ன வார்த்தைகளை வரிகளாகி காட்சிப் படுத்தி வாசகனை நாடி பார்க்க கற்றுக் கொடுக்கிறது.

 

"ஆரோக்கிய நிகேதனம்புத்தகம் படிக்க வேண்டும் என்றஉந்துதலை ஏற்படுத்தியது

 

அகமனம்புறமனம் என மனதின் செயல்பாடு. மனம் நம் வசம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர முடிகிறது.

 

செயலைச் சரியா செஞ்சா அதுதான் சரியான பிரார்த்தனைஇதை உணராமல் கோயில்களை உருவாக்கி மனிதத்தை தொலைத்தோம். உழைப்பை விடுத்து மாய உலகத்தில் சஞ்சரிக்கிறோம்.

 

நாம் இருக்கிற வரை இறப்பு வராது.... இறந்ததுக்கு அப்புறம் நாம் இருக்க மாட்டோம்.. எதுக்கு வீணா யோசிக்கணும். இதை அறியாமல் இன்று உலகத்தில் பயத்தை விதைத்து விதைத்து மரணம் நடக்கிறதுஇன்று பயத்தின்  பெயர் தீ நுண்ணி  நாளை வேறு பெயர் சூட்டலாம். ஆனால் பயமுறுத்தும் படலம் தொடரலாம்.

 

பல பிடித்த வரிகளில் சில புத்தகத்திலிருந்து.....

 

"இருக்கிற காலத்தை நிறைவோட வாழணும்... எந்த நிமிசம் நம் ஆயுசு முடிஞ்சாலும் அதுக்கு முன்னால் இருந்த நிமிசம் நிறைவானதா இருக்கணும்.   ..."

 

"வாழ்க்கையை முழுசா யூஸ் பண்ணுவோம்... நம்முள் சிரிப்போம்... முடிஞ்சா எல்லாத்தையும் சிரிக்க வைக்க முயற்சிப்போம்... 

 

"சுதந்திர இந்தியா அலோபதி மருத்துவத்தின் அடிமையாகவே இருந்தது"

 


 

"எதுவும் அழிந்து விடாது, புதிய பிறவியெடுக்கும்"

 

"ஒவ்வொரு செயல்லையும் நம்ம மனசு ஒட்டியிருக்கணும்....அப்படி ஒட்ட முடியலேன்னா ஆத செய்யவே கூடாது"

 

"பயன்பாடே இல்லாத பொருளை வீட்டில்வைத்திருப்பது தொடர் பொருளாதார இழப்பிற்கு வழி வகுக்கும்"

 

"மரணத்துக்கு எந்த மருத்துவத்திலும் மருந்தில்ல தம்பி....”   -  இந்த சொல்வடையை தாரக மந்திரமாக ஓவ்வொரு மனிதனும் உணர்ந்தால், இன்று உலகத்தை ஆட்டி படைக்கும்  மருத்துவ வணிகத்தில் இருந்தும்  மருந்து மாஃபியாவிலிருந்தும் மனித குலம் மிண்டு வர வேண்டும். அதற்குஆதுர சாலைஒரு திறவு கோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.   

 

நிஜ வாழ்க்கையில  நம்மால் ஒரு வாழ்க்கை தான் வாழ முடியும் ? ஆனால் ஒவ்வொரு நாவலை வாசிக்கும் போதும் அதில் வருகிற  கதாபாத்திரங்களோட வாழ்க்கைய நாமும்  வாழுறோம் என்பது நிதர்சனம்.

 

 "ஆதுர சாலை"  -  நாவலில் வரும் கோபால் சார்அன்பு டாக்டர், மில்டரிராணி அக்கா, அரசி, கதிர் மாரியம்மாள் பாட்டி........ அவர்களோடும் ஆசிரியரோடு பயணித்த அனுபவத்தை இந்த புத்தக வாசிப்பு அளித்தது.

 

இந்த நாவலின் வாசிப்பு நடைமுறையில் நடக்கும் மருத்துவ அவலங்களை நம் சமூகம் எப்படி மருந்து உலகத்தில் சிக்கி சிரழிந்து கொண்டு உள்ளது என்பதை நன்கு உணர்த்துகிறது.  

 

 

நம் உடலே மருத்துவர். நம் உடலுக்கு இன்னல் விளைவிக்காமல் இருப்பது நமது கடமைஅன்பு கதாபாத்திரத்தில் மறைந்து நம்மோடு வாழும் அனுபவத்தை தருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் என்றதன்நம்பிக்கையை "ஆதுர சாலை* எனக்கு வழங்கி ஒரு நல்ல அனுபவத்தை தந்ததுஇதை பகிரிந்து கொள்ள நான் வாய்ப்பை அளித்தமைக்கு "RECEIVER MEDIA" மனமார்ந்த நன்றி.

 

நன்றி

திருமதி.சாந்தி சரவணன்

                                                    சென்னை


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


Previous Post Next Post