என் வாழ்க்கை முன் போல் இல்லை - தெ.வர்ஷினி

 



என் வாழ்க்கை முன் போல் இல்லை

முன்னுரை :-

            எனது வாழ்க்கையை மாற்றி என்னை எனது இலட்சியப் பாதையில் அழைத்துச் செல்லும் எனது தமிழ் ஆசிரியை திருமதி. இரா.சிவலலிதா அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு மற்றும் பள்ளிவாழ்க்கை :-

            தஞ்சாவூரில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்தார். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

கல்லூரி வாழ்க்கை :-

            1995 முதல் 1998 வரை நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட்கள் கல்லூரியில் புலவர் பட்டயம் படித்தார். 1998 முதல் 2000 வரை தமிழவேல் உமா மகேஸ்வரி கலை கல்லூரியில் முதுகலை படித்தார். 2000 முதல் 2002 வரை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படித்தார். தமிழ் பல்கலைக்கழகத்தில் டி.பி.டி படித்தார்.

செய்த பணிகள்:-

            2003-ல் தேனியில் உள்ள தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றினார். 2004 முதல் 2005 வரை தஞ்சாவூரில் உள்ள பிளேக் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியையாக பணியாற்றினார். சென்னையில் ஜெயம்ரவி நடித்த தாஸ் எனும் திரைப்படத்திற்கு கதை கலந்துரையாடலில் பங்கு பெற்றார். 2005-ல் ஆடோடிகள் எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். 2006 முதல் 2007 வரை தஞ்சாவூர் புனித வளனார் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்தார். மதுரையில் உள்ள அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2007 முதல் 2008 வரை தமிழ்துறை தலைவராக பணிபுரிந்தார். 2011-ல் இலக்கியன்  Play School தொடங்கினார். 2012-ல் நான் படிக்கும் பள்ளியான மதுரையில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கிறார்.

 


எனது திறமையை கண்டறிந்தவர் :-

            நான் 2016-ஆம் ஆண்டில் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அப்பொழுது எனக்கு அங்கு யாரையும் தெரியாது. அப்போது முதல் நாளில் அவர் அவரைப் பற்றி கொடுத்த அறிமுகவுரை எனக்கு மிகவும் ஆச்சர்யமூட்டியது. அனைவரும் அவர் அவரைப் பற்றி கூறும்போது பெயர், ஜாதி, மதம் கூறினர். அப்போது எமது வகுப்பு தோழிகள் அனைவரும் அவரிடம் கேட்டனர். அப்பொழுது அவர் என் பெயர் சிவலலிதா என்று கூறிவிட்டு அதோடு நிறுத்திவிட்டார். அப்போது அனைவரும் நீங்கள் என்ன மதம் என்று கேட்டனர். அப்போது அவர் நான் ஒரு தமிழச்சி என்றார். அது என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. அவர் அன்று பேசும் போது திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அப்போது நான் என்னிடம் உள்ள பேச்சுத்திறனை அவரிடம் சொன்னேன். அப்போது அவர் என்னை பல போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு பல தோல்விகள் மட்டுமே கிடைத்தது. அப்போது என்னை அவர் சமாதானப்படுத்தி எனக்கு ஆறுதல் கூறுவார்.

எனக்கு இன்னொரு தாய் :-

            அப்போது அவர் எனக்குக் கொடுத்த பயிற்சிகள் இப்போது இந்த ஊரடங்கில் பல வெற்றிகளை தேடித் தந்தது. எனக்கு அவர் இன்னொரு தாய் போல என்னையும், என் திறமையையும் ஆதரித்தார். என் வாழ்க்கையை முன் போல இல்லாமல் வெற்றிப் பயணத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

 

முடிவுரை :-

     இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர் யாருக்கும் கிடைக்கமாட்டார். இப்படி ஒரு ஆசிரியர் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். எங்கள் தமிழ் அம்மாவை வாழ்த்த எனக்கு வயதில்லை. அவர் இறைவன் அருளைப் பெற இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி வணக்கம்

                                                                                                                                                                                                                                             -தெ.வர்ஷினி

மதுரை

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 -Receiver Team📞 

Previous Post Next Post