நான் பார்த்ததிலே - செ. திவ்யா ஸ்ரீ 

 நான் பார்த்ததிலே:


        என் பயணத்தில் நான் பார்த்ததிலே பிரமித்த இடம் என்றால், அந்த இடம் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசிக்க படும் அத்திவரதரை பார்க்க நான் பயணப்பட்டது, எனக்கு இனிமையான அனுபவம். 40 நாட்கள் மட்டுமே அத்திவரதர் காட்சி அளிப்பார் என்று சொல்ல அப்பாவும் அம்மாவும் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து 37 ஆம் நாளன்று என்னையும் என் தம்பியும் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு செல்ல தயாரானோம். அனைவரும் கூட்டம் அதிகமாக இருக்கிறது பார்த்து செல்லுங்கள் என்று கூறினர்.அப்பா அம்மா மாமி பக்கத்து வீட்டு அத்தை தம்பி இவர்களுடன் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக நான் காத்திருந்த பொழுது, காஞ்சிபுரத்திற்கு செல்லும் பேருந்து வந்தது முண்டியடித்து பேருந்தில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தேன். ஒரே பரபரப்பாக இருந்தது கூட்டம் எப்படி இருக்கும் அத்திவரதர் எப்படி இருப்பார் என்று ..இரவு 11 மணிக்கு தொடங்கிய எங்கள் பயணம் விடியற்காலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தின் எல்லைக்கு அப்பால்பேருந்து நிறுத்தப்பட்டு நடை பயணமாகவே அத்தி வரதர் தரிசிக்க சென்றோம்.

    அத்தி வரதரைகாடகோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் எங்களை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்க வைத்தனர். அந்த வரிசை பக்கம், பக்கமாக என பத்துக்கும் மேல் வரிசையாக ஒரு பெட்டி போல் அமைந்தது. இந்தப் பெட்டி போல் வரிசை வரிசையாக  என பத்து பன்னிரண்டு பெட்டிகளை தாண்டிச் சென்றோம். இதோ வந்துவிட்டது அத்திவரதர் என்று நினைத்தேன்,,, ஆனால் அதற்குப் பின்பும் இன்னொரு இதேபோல் வரிசை ,வரிசையான, பெட்டிக்குள் அடைபட்டு இருக்கும் மொத்த மக்களையும் பார்க்கும்பொழுது ,இறைவனை காண இவ்வளவு கூட்டமா!! என பிரமித்து நின்றேன். மீண்டும் பெட்டிகளை தாண்டி கோவில் மதில் சுவர் ஓரம் இதோ வந்துவிட்டது அத்திவரதரை காணும் இடம் என்று நினைத்து சென்றால், மதில் சுவர் ஓரம் போக, போக,போக கடைசி மதில்சுவர் அடுத்த கோபுரம் வரை வரிசை, அங்கிருந்து மீண்டும் ஒரு பெட்டியாக குழுவாக மக்களை அமர வைத்து,பின் அடுத்த பெட்டிக்கு குழுவாக அமைப்பினர். அது ஒரு நல்ல அனுபவம் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து 10 நிமிடம் 20 நிமிடம் தங்களிடையே பேசிக் கொண்டிருப்பதும், அடுத்த பெட்டி எப்போது திறப்பார்கள் செல்லலாம் என்று இருந்ததும், எப்பொழுது நான் அத்திவரதரை காண்பேன் என்றும் எனக்கு மிகவும் விறுவிறுப்பாக!! இருந்தது. இப்படியாக 20 தடுப்புகளை பெட்டி பெட்டியாக தாண்டி இறுதியில் கோவிலின் கோபுரத்தை அடைந்து விட்டது அத்தி வரதர் தரிசனம்தான்அடுத்து என்று எண்ணினால்,, அங்கும் மீண்டும் வரிசை, சவுக்கு கொம்புகளால் கட்டப்பட்ட வரிசையில் அப்பப்பா... குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் செல்லும் அளவிற்கு சவுக்குக் கட்டைகளை குறுக்க குறுக்க கட்டி, கட்டி ஒரு கட்டம் ஒரு இரண்டு கட்டம் என்ன இப்படி போய் அப்படி ,அப்படி ,போய் இப்படி என்று வந்து வந்து ,வந்து ,வந்து வந்து இதோ வந்துவிட்டது அத்திவரதர் என்று ஒரு மணி நேரம் கழித்து சென்றால்,,,அப்போதுதான் கோவிலின் உள் சுற்றுக்குள் சென்ற நிற்கிறது வரிசை.    அந்த உள் சுற்றிலும் மீண்டும் மக்கள் கூட்டம் பெட்டி, பெட்டியாக அங்கங்கே நின்று, நின்று ஒரு பெட்டியில் உள்ள மக்கள் தாண்டியவுடன் அடுத்த பெட்டிக்கு செல்லும் அளவிற்கு செல்ல, செல்ல, செல்ல காணப்போகிறோம் அத்திவரதரை என்ற ஒரு பெரும் மகிழ்ச்சியோடு கோவிலின் அருகில் அத்திவரதரை பார்க்க நெருங்குகிறேன் மக்கள் வெள்ளம் கோவிந்தா! கோவிந்தா! என்றும் நமோ நாராயணா! என்றும் பேசுவதும்!சொல்வதும்! என் காதுகளில் கேட்டது மெல்ல அத்தி வரதர் இருக்கும் அறை அருகில் சென்றோம்!! முன்பக்கம் அத்தி வரதர் இருக்கிறார் என்றால், பக்கச் சுவர் வழியாக ஒரு சிறு துளை வழியாக அத்திவரதரின் பக்க முகம் தெரிந்தது!!!!!!!அடடா !!! அத்திவரதனை காணத் தானே இத்தனை எல்லைகளையும் தாண்டி அதிகாலை 4 மணிக்கு கிளம்பினால் மாலை 3 மணி ஆகிறது பதினோரு மணி நேரமாக நடந்து கடந்து வந்தோம்,,, என்று எண்ணி, அத்திவரதரை காண முன் பக்கம் செல்ல விரும்புகிறேன் என் மனமும்,உடலும், மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது!!!!!
    நமக்கு இப்பொழுது 15 வயது,, 40 வருடங்கள் கழித்துதான் மீண்டும் அத்திவாரத்தை காணப் போகிறேன் எவ்வளவு ஒரு சந்தோஷமான விஷயம் எல்லோருக்கும்  இந்த. மகிழ்ச்சியான கொடுப்பினை இருக்குமா! என்று தெரியவில்லை எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது அத்திவரதரை காண நான் முண்டியடித்து முன்னே செல்கிறேன் அங்கு காவலர்கள் சீக்கிரம்! சொல்லுங்கள்! சீக்கிரம்! செல்லுங்கள்! என்று கூறுகிறார்கள் நான் மெல்ல நடக்கிறேன் அம்மாவும்! அப்பாவும்! அத்தி வரதரை நன்றாக பார்!  பார்!என்று கூறுகிறார்கள் நான் திரும்பி அத்தி வரதரை பார்க்கிறேன் அடடா!!! வரதர் நின்ற கோலத்தில் என்ன அழகு கத்தரிப்பூ நிறத்தில்  மேலாடையும், துளசி மாலையும், பூமாலையும், கையில் சங்கும், சக்கரமும், நெற்றியில் நாமமும்,  கைகளில் தங்க காப்பு,  அந்த கைகளின் விரல்களை மூடிய தங்க மேல் பூசும், அதில் மா  சு  . என திவ்யபிரபந்தத்தில் ராமானுஜரின் வாக்கியமும்!!! பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் அத்திவரதரை!!!! என் இரு கண்களாலும் என் இதயம் முழுவதும் நிரப்பி தரிசித்தேன் இறைவா!!! உன்னை இன்னும் 40 வருடங்கள் கழித்து பார்க்கப் போகிறேனா???? இந்த உலகத்தில் நான்..... என்று எண்ணி அத்திவரதரை கண்கள் சிமிட்டாமல் பார்த்து! பார்த்து மகிழ்கிறேன்! இரு கை கூப்பி  வணங்கி விட்டு மெல்ல கூட்டத்தின் மடியில் தவழ்ந்து கோவிலின் பிரகாரத்தை விட்டு,, கோபுரத்தின் அருகில் வந்து கூட்டத்தில் இருந்து சற்று விலகி,,,, இயற்கை காற்றை சுவாசித்து, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

    இந்த அனுபவ பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஒரே பரபரப்பாகவும் இருந்தது இந்த அனுபவ பயணம் அத்திவரதரை பார்க்கச் அப்பா செந்தில்குமார் அம்மா ரத்தினா தம்பி கமலேஷ் எங்கள் மாமி யசோதை பக்கத்து வீட்டு கீர்த்தி அம்மா இன்னொரு பக்கத்து விட்டு கார்த்தி அம்மா இவர்களுடன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்தி வரதரை காண  காஞ்சிபுரம் சென்றதும் பதினோரு மணி நேரம் நடந்து,நடந்து அத்திவரதரை தரிசித்ததும்,,, என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். என் வாழ்நாளில் என்றுமே இதுபோல் காண முடியாத பயணம் இதுவே! இந்தப் பயணமே   என் அனுபவ பயணமாகும்.

 

நான் பார்த்ததிலே பயண  கட்டுரையை எழுத எனக்கு வாய்ப்பளித்த ரிசிவர் இந்தியாவுக்கு என்னுடைய இதயம் கனிந்த நன்றி பூக்களை சமர்ப்பிக்கிறேன்.

 

-செ. திவ்யா ஸ்ரீ

திருவண்ணாமலை

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


Previous Post Next Post