வாழ் - திரை அனுபவம்

வாழ் - திரை அனுபவம்"நீ சந்திக்கிற மனுசங்க, உன் வாழ்க்கைய மாத்துற சக்தி படைச்சவங்க" இந்த ஒரு வசனம் தான் இந்த திரைப்படத்த இயக்க வச்சுருக்கும். ஒரு சினிமா ரசிகனின் திரை அனுபவத்தை பகிரவே இந்த பதிவு.

    வாழ்க்கையோட ஓட்டம் என்னவென்றே தெரியாம ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை தரும். இது மட்டும் தான் நடக்கும் என நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கவங்களுக்கும், இவங்க மட்டும் தான் நம்ம வாழ்க்கை என நினைச்சுட்டு இருக்கரவங்களுக்கும். எதுவும் நடக்கும், எப்படியும் வாழ்க்கை மாறும். யாரோ முகம் தெரியாதவங்கனால கூட நம்ம வாழ்க்கை மாறலாம் என அனுபவ மொழியால் காண்பித்துள்ளனர்.

    காதல் என்பது எப்படியும், யார் மீதும் ஏற்படும், இயற்கையோடு இணைந்து பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என அழகாக காட்சிபடுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

    நாளைக்கு, நாளைக்கு என கூறும்போது.!!! இன்று இப்போது தான் நீ வாழ்கிறாய். வாழ் என கூறாமல் கூறுகிறாள். வாழ்க்கையில பயணம் எவ்ளோ முக்கியம். நாம சந்திக்கிற மனிதர்கள் எவ்ளோ முக்கியம், அவங்க மூலமா கிடைக்கும் அனுபவங்கள் நம்ம வாழ்க்கையில ஏற்படுத்தும் மாற்றங்கள் என வரிசையா பற்பல காட்சியனுபவம் இத்திரைப்படத்தில்.

    இயற்கையின் அழகும் அது நமக்கு தரும் இன்பத்தை அனுபவிக்க "வருசத்துல முப்பது நாள்... வீடு... வேலை... குடும்பம்.. எல்லாத்தையும் மறந்து தன்னந்தனியா பயணம் செய்" இதை கேட்கும் போது நாமே அந்த காட்சிகுள் போனது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியது. இந்த படத்தை உருவக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். இசையும், ஒளிப்பதிவும் போட்டி போட்டு கொண்டதை போல் ரசிக்க பேரனுபவம். வசனங்கள் எளிமையை போல் இருப்பினும் ஆழமாக யோசிக்க சிந்திக்க வைக்கிறது. 

வாழ்- வாழ்வோம்

-பிரதாப்

Receiver Team


2 Comments

Previous Post Next Post