TNPSC Current Affairs in Tamil 09-12-2022


1.குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 156 தொகுத்துகளில் வென்று வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. குஜராத்தில் பாஜக சார்பில் மாநில முதல்வராக பூபேந்திர படேல் வரும்  12- ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.


2.கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை  சென்னை ஐஐடி ஆய்வுக்குழுவினர் வடிவமைத்துள்ளனர்.'சிந்துஜா -1' என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ தொலைவில் 20 மீட்டர் ஆழத்தில்  வைக்கப்பட்டுள்ளது . இக்கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும்.அடுத்த 3 ஆண்டுகளில் ,கடல் அலையிலிருந்து ஒரு  மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


3.சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின்  தற்சார்ப்பு  நிதி (பிரதமரின் ஸ்வாநிதி )திட்டத்தை வருகின்ற 2024- ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய வீட்டு வசதி ,நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை இணையமைச்சர் கௌசல்கிஷோர் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.


4.இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் சென்னையில்  நடைப்பெற உள்ளது.அடுத்த ஆண்டு மார்ச்( 23-25) ஆம்  தேதிகளில்  சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.தலைப்பு- தொழில் நுட்பம் ,தொழில்முனைவு ,திறன் சமர்ப்பிப்பு -யூமெஜின்  மாநாடு ஆகும்.


5.சமீபத்தில் சிறைக்கைதிகளை நேரலையில் கண்காணிப்பதற்கக்காக காவலர்கள் சட்டையில் கேமரா அணியும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம்ப்படுத்தபட்டுள்ளது.


                                                                                                                                     -Bakya
                                                                                                                                  Receiver Team

                                                                                                                               

Previous Post Next Post