TNPSC Current Affairs in Tamil 10-12-2022


1 வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் ,மாமல்லபுரம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது .புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்த்தது.'கடந்த 1891 முதல் 2021 வரையிலான 130 ஆண்டு காலத்தில் சென்னை ,புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளது  ' என  தென்  மண்டல  வானிலை ஆய்வு மையத் தலைவர்  கூறினார்.


2.மூதறிஞர் இராஜாஜி  அவர்களின்  144 ஆவது பிறந்தநாள்  இன்று.10.12.2022


3.2025- ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 20.16 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ,அந்த நோயால் 73,551 பேர் மரணமடைந்தனர்.உலகளாவிய காசநோய் அறிக்கை 2022-இன்படி ,நாட்டில் காச நோய் பாதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது.

4.தமிழகம் உள்பட  4 மாநிலங்களின் பழங்குடியினர் (எஸ்டி ) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன .தமிழகம் ,கர்நாடகம் ,சத்தீஸ்கர் ,ஹிமாசலப்பிரதேசம்  ஆகிய  4 மாநிலங்களுக்கான பழங்குடியினர் நலத் துறை  அமைச்சர்  அர்ஜுன்  முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார்.இதன்மூலம் தமிழகத்தில் நரிக்குறவர் ,குருவிக்காரர் சமுருகங்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்.அதுபோல ,ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினர்,கர்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினர் ஆகியோரையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க  மசோதா வழிவகுக்கிறது.

                                                                                                                                                 -Bakya

                                                                                                                                            Receiver Team    


Previous Post Next Post