இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் முதல் மூன்று இடத்தில் 1.முகேஷ் அம்பானி இவரது சொத்து மதிப்பு ரூபாய் 6,49,865 கோடிகள். இது கடந்த ஆண்டை விட 73% உயர்வு என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் பங்கு ஒப்பந்தம் செய்த பின்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால். இந்நிறுவனத்திற்கு கூடுதல் பலம்.
இரண்டாம் இடத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 3,76,585 கோடிகள் கடந்த ஆண்டைவிட 61% உயர்வு என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. அதானி குழும பங்குகள் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களோடு காணப்படுகிறது.
மூன்றாம் இடத்தில் HCL நிறுவனர் சிவ் நாடார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூபாய் 1,84,629 கோடிகள். HCL Tech பங்குகள் சமீப காலமாக சீரான ஏற்றத்துடனே திகழ்கிறது.
#Business, #TopThreeIndians #IndianBusinessman #RichestPerson #Top3 #Forbes #Ambani
இந்தியாவின் முதல் மூன்று பணக்காரர்கள்
Reviewed by receiverteam
on
October 09, 2020
Rating:

No comments: