நான் பார்த்ததிலே - ஆ. ஜாஸ்லீன் ஆக்னஸ்

 


நான் பார்த்ததிலே

பயண அனுபவக் கட்டுரை

என் பெயர் ஆ. ஜாஸ்லீன் ஆக்னஸ். நான் மூன்றாம் வகுப்புபிரிவில் தூய வளனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றேன். தாங்கள் நடத்துகின்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டு நான் சொல்ல சொல்ல என் அம்மா எழுதினாங்க.

நாங்கள் முதன்முதலில் போன இடம் திருச்சி மலைக்கோட்டை மே 5 2018 மலையில் பயணம் செய்து உச்சியை அடைந்தோம் மூச்சு வாங்கினாலும் நாங்கள் மலையின் மேலே சென்றோம். நாங்கள் மேலே போய் அங்கே இருந்த கடவுள் சிலையை பார்த்தோம். மேலே இருந்து கீழே பார்த்தால் ஒரு உலகமே தெரிந்தது.

நானும், எங்கப்பாவும், எங்க அண்ணனும் சேர்ந்து செல்பி எடுத்தோம்.

அடுத்ததாக கல்லணை போனோம். அங்கே இருந்த பார்க்கில் விளையாடினோம். அங்கே இருந்த ஊஞ்சலில் நானும் எங்க அண்ணனும் சேர்ந்து ஆடினோம். எங்க அம்மாதான் ஆட்டிவிட்டார்கள்.

அங்கே இருந்து அடுத்ததாக பூண்டி மாதா கோயிலுக்கு போனோம். அங்கே இருந்த மாதாவிடம் வேண்டிக்கொண்டோம். பேருந்தில் தூங்கிக்கொண்டே நாங்கள் வந்தோம். பேருந்து நிலையத்திலிருந்து இரவில் சுற்றுகின்ற பூச்சிகளை பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டிற்கு வந்தோம். இப்படியாக எங்கள் முதல் பயண அனுபவம் இருந்தது.

மே 8 2019 அடுத்த விடுமுறையில் நாங்கள் சென்ற இடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்கின்ற இடத்தில் உள்ள மணியடிச்சான் பாறை என்கிற இடத்திற்கு சென்றோம். நான், எங்க அம்மா, அப்பா, அண்ணன், பெரியம்மா, ஆச்சியுடன் சென்றோம். அங்கே இருந்த ஆலயத்தில் வேண்டினோம். அங்கே திடீரென ஒரு நாய் வந்தது. நாங்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பும் வரை எங்கள் பின்னே அந்த நாய் வந்தது எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது.



 அங்கிருந்து வடக்கன்குளம் மாதா கோயிலுக்கு சென்றோம். அங்கிருந்து கிளம்பி மாத்தூர் தொட்டி பாலம் பார்க்க சென்றோம். அப்பா!  எவ்வளவு பெரிய, எத்தனை உயரமான பாலம்.’ பாலத்திற்கு கீழ் இருந்த ஆற்றில் குளித்தோம். அப்படி குளிக்கும் போது திடீரென என் அண்ணன் முழுகுவது போல தண்ணீரின் உள்ளே போய்விட்டான். நாங்கள் எல்லாம் பயந்து விட்டோம். பிறகு மேலே வந்துவிட்டான். அதில் கொஞ்சம் எங்க அண்ணன் பயந்து பிறகு அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்தோம். அப்புறம் அப்படியே பாலத்தின் மீது நடந்து நடனமும் ஆடினோம். பாலத்தின் தொட்டியை பார்த்து வியந்தோம்.

 பிறகு அங்கிருந்து தக்கலை பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்றோம். அங்கேயே மதிய உணவு சாப்பிட்டோம். அரண்மனையை சுற்றி பார்க்கும் முன் எனக்கு வியப்பு உண்டாகிவிட்டது. இவ்வளவு பெரிய அரண்மனை என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு இடத்தில் இருந்த ஜன்னலில் என்னை நிற்க வைத்து எங்கப்பா என்னை போட்டோ எடுத்தாங்க அந்த போட்டோ எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கிருந்து கிளம்பும்போது அங்கே விற்ற பபுல்ஸ் டப்பா வாங்கி தந்தாங்க. ஜாலியாக ஊதிக் கொண்டே வந்தோம்.



பிறகு, அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் அங்கு சென்ற நேரத்தில் படகு போக்குவரத்து நேரம் முடிந்து விட்டது என்று கூறினார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. முதல்முறையாக படகில் பயணம் செய்ய ஆசைப்பட்ட எனக்கு ஏமாற்றம் ஆகிடுச்சி. பிறகு விவேகானந்தர் மியூசியம், காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் இவற்றை எல்லாம் பார்த்தோம். காமராசர் மண்டபத்தில் நிறைய குருவிகள் கூடுகட்டி இருந்ததை பார்த்த பொழுது மிக மிக சந்தோசமாக இருந்தது. பிறகு கடலுக்கு சென்று கடல் நீரில் காலை நினைத்தோம் ஜாலியாக இருந்தது. கடலின் மத்தியில் இருந்த திருவள்ளுவர் சிலையை பார்த்தோம் மிக பிரம்மாண்டமாக இருந்தது. (நான் என் மனதில் ஒன்றை நினைத்தேன் என்னவெனில் இதைப்போலவே ஒரு சிலையை உருவாக்குவேன் என்பதே அது) அங்கே இருந்த போட்டோ காரர்கள் என் அண்ணனையும் என்னையும் போட்டோ எடுத்தாங்க. பிறகு சூரியன் மறைவதை பார்க்கின்ற நேரமானது. நாங்கள் மேற்கு பக்கத்தில் மிக மிக வேகமாக கிட்டத்தட்ட ஓடி சென்றோம் அந்த இடத்திற்கு. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள்ளே சென்றதை பார்க்க அவ்வளவு சூப்பராக இருந்தது. அடுத்த விடுமுறையில் சூரிய உதயத்தை பார்க்கலாம் என்று எங்க அப்பா கூறினார். அன்று சூரிய மறைவை பார்க்க தமிழக ஆளுநரும் வருகை புரிந்திருந்தார். பிறகு கிளம்பி வீட்டிற்கு வந்தோம்.

 நாங்கள் சென்றது மிக நல்ல பயணம். நான் எழுதியது மிக நல்ல கட்டுரை. வெற்றியை தேடி நாம் போகக்கூடாது வெற்றிதான் நம்மை தேடி வர வேண்டும்.

                                                நன்றி 

-ஆ. ஜாஸ்லீன் ஆக்னஸ்.

திருவண்ணாமலை மாவட்டம்

 

 

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


Previous Post Next Post